உளுந்தூர்பேட்டை அருகே காதல் ஜோடி தஞ்சம்..

696

உளுந்தூர்பேட்டை அருகே இரண்டு கிராம மக்கள் மோதலுக்கு காரணமாக இருந்த காதல் ஜோடி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிபதி முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்!!!

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் இவர் அந்த பகுதியில் உள்ள பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார் இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இவர்களின் காதலுக்கு சுகன்யாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் சுகன்யாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர் இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர் இந்தநிலையில் சுகன்யா கடத்தப்பட்டதாக கூறி அவரது பெற்றோர்கள் திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர் அதன்பேரில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியும் சுகன்யாவின் காதலன் இளங்கோவன் பெற்றோர்கள் சுகன்யாவை தங்களிடம் ஒப்படைப்பதாக கூறி பின்னர் ஒப்படைக்கவில்லை என கூறியும் சுகன்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கிளியூர் கிராமத்திற்கு சென்றனர் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த இரு கிராமங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் அப்பொழுது சுகன்யா உரிய முறையில் தங்களிடம் ஒப்படைக்க வில்லை எனக்கூறி அவரது உறவினர்களும் பெற்றோர்களும் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது சுகன்யாவின் உறவினர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கினர் இதில் திருநாவலூர் காவல் ஆய்வாளர் விஜி உதவி ஆய்வாளர்கள் ஜெயச்சந்திரன் வினோத் குமார் உட்பட 4 போலீசார் படுகாயமடைந்தனர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருநாவலூர் போலீசார் சுகன்யாவின் உறவினர்கள் 20க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர் இந்த நிலையில் இரு கிராம மக்கள் மோதலுக்கு காரணமாக இருந்த காதல் ஜோடிகள் இன்று உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிபதியின் வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர் இருவரையும் விசாரணை நடத்திய இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரோஸ்கலா சுகன்யாவின் விருப்பத்தின் பேரில் அவரை இளங்கோவனுடன் அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here