
சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் மீது வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் தலித் ஆக்சன் கமிட்டி சார்பில் புகார் .
தஞ்சாவூர் சென்னை ஐ.ஐ.டி.யில் ஆசிரியர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு விதிமீறல் குறித்தும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்களை பணி நியமனம் பெற்று விடாமல் தொடர்ந்து திட்டமிட்டு தடுத்தும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி அவர்களுக்கான இடஒதுக்கீடு உரிமையை வழங்காமல் வன்கொடுமை குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்ற சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி பதிவாளர் ஜானே பிரசாத் புல முதல்வர் கோஷ் ப் வர ஜி ஹெஸ் ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தலித் ஆக்சன் கமிட்டியின் தேசிய பொதுச் செயலாளர்
A. M. ராஜா தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வாளரிடம் புகார் மனு அளித்தார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்களுக்கு எதிராக அலுவலர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஸ்கர ராமமூர்த்தி மீது எஸ்.சி, எஸ்.டி.அட்ராசிட்டி ஆக்ட் மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர் பொறுப்புக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிறது ஐ.ஐ.டி.யில் தலித் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு 22ண்டரை இடஒதுக்கீடு செய்ய வேண்டிய இடத்தில் 14 பேர் மட்டுமே பணிHரிகின்றனர் படித்த அறிவாளிகள் உள்ளே நுழைய முடியவில்லை. உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தெளிவான அறிவுரை வழங்கியும் ஒரு சக்தி எஸ்.சி.எஸ்.டி.பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை தடுக்கிறார்கள் எனவே ஐ.ஐ.டி.யில் நடக்கும் முறைகேடுகளை கண்டறிய நீதிபதி தலைமையிலான விசாரணை கமிசன் அமைக்க வேண்டும் இது தொடர்பாக பாதிக்கப்பட்டோர் மூலம் மதுரை 2யர் நீதிமன்ற கிளையில் மனு அளித்துள்ளோம் மேலும் கடந்த காலங்களில் சென்னை ஐ.ஐ.டி.யில் 14 பேர் தலித் சிறுபான்மையினர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் அது குறித்தும் நீதிபதி மூலம் விசாரணை கமிசன் அமைத்து விசாரிக்க வேண்டும் தற்போது ஐ.ஐ.டி.யில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முறையாக தேர்த்தெடுக்கப்படவில்லை எனவே அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் 87% சதம், உயர் சாதியினரால் ஆக்கிரபிக்கப்பட்டுள்ள ஐ.ஐ.டி.யில் இதர வகுப்பினர் 13% மட்டுமே உள்ளனர் எனவே பொறுப்பில் உள்ளவர்கள் மீது இந்திய வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்துள்ளதாக ராஜா தெரிவித்தார்.