



பணியிடை மாறுதலாக ஈரோடு செல்லும் தாராபுரம் காவல் ஆய்வாளர் கோபிநாத் அவர்களுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது
தாராபுரம்:_ஜூன்:-21
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல்நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வந்த கோபிநாத் அவர்கள் பணியிடை மாறுதலாக ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்திற்கு செல்ல உள்ளார்
இவர் தாராபுரம் நகரில் பணிபுரிந்தபோது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை சரியான முறையில் கையாண்டு பொதுமக்களுக்கு சிறந்த முறையில் பணி செய்தார் மற்றும் கொரோனா என்ற கொடிய நோய் தாராபுரம் பகுதியில் பாதிக்கப்பட்ட போது பாதிக்கப்பட்ட இடங்களில் சிறந்த முறையில் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து பொது மக்களைக் காப்பதில் ஒரு அரணாக செயல்பட்டார் மற்றும் CAA,NPR,NRC, போன்ற தொடர் போராட்டங்கள் தாராபுரம் நகரில் நடத்தப்பட்ட போது எந்த ஒரு அசம்பாவிதம் நடக்காமல் சுமூகமாக கையாண்ட விதம் குறிப்பிடத்தக்கது தாராபுரம் நகரில் சிறந்த ஒரு காவல் ஆய்வாளராக பணி செய்துவிட்டு இன்று ஈரோடு கருங்கல்பாளையம் இட மாறுதலாக செல்லும் ஆய்வாளர் கோபிநாத் அவர்களுக்கு குண்டடம் காவல்ஆய்வாளர் சுரேஷ் அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஞானகுமார் அவர்கள் முன்னிலையில் சமூக இடைவெளியுடன் பாராட்டு விழாவும் விருந்து உபசரிப்பும் நடைபெற்றது இந்நிகழ்வில் உதவி ஆய்வாளர்கள் கார்த்திகேயன் ஜெயக்குமார் இயேசுதுறை மற்றும் தலைமை காவலர்கள் தனசேகர் சரவணன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பிரபு,சிலம்பரசன், பூபதி, சந்திரசேகர், கருப்புசாமி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்…
தாராபுரம் செய்தியாளர் ஜாபர்