
மதுரை கூடல்புதூர் காவல்துறையினர் திண்டுக்கல் நெடுஞ்சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சொகுசு கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்த போது, இ பாஸ் இல்லாமல் வந்தது தெரிய வந்தது. காரில் வந்த நபர் தன்னை பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கொடைக்கானலை சேர்ந்த வேலுமணி என தெரிய வந்தது. தன்னை பயிற்சி ஐஏஎஸ் எனக்கூறி காரில் பல ஊர்களுக்கு சுற்றியது தெரிய வந்தது. அதனத்தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
