மதுரை ஒத்தக்கடை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேர் கைது.

831

பணம் வைத்து சூதாடிய 10 நபர்கள் கைது ரூ.21,640 பறிமுதல் செய்த மதுரை மாவட்ட போலீசார்.
21.06.2020. மதுரை மாவட்டம். ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளர், ஆனந்ததாண்டவம் தலைமையில், போலீசார் எஸ். எஸ் மஹால் மற்றும் ஐயப்பன் நகரில் ரோந்து செய்த போது, அங்கே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 10 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சீட்டுகள்- 52 பணம் ரூ- 21,640 பறிமுதல் செய்து, மேற்படி நபர்கள் மீது ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here