வாட்ஸ்அப் ஹேக்கிங்.. மாணவிகளுக்கு மிரட்டல்.. பெண் உள்பட மூவர் கைது..!

869

ஹரியானா மாநிலத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவிகளின் வாட்ஸ்அப் செயலியை ஹேக் செய்து பணம் கேட்டு மிரட்டிய பெண் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

ஃபரிதாபாத், பல்வால், குருகிராம் மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் வாட்ஸ்அப் செயலிகள் ஹேக் செய்யப்பட்டு பணம் கேட்டு மிரட்டப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஏர்டெல் நிறுவனத்தில் பணியாற்றிய சத்தார்கான் என்பவர் போலி ஆதார் எண்களைப் பயன்படுத்தி மணீஷ் மற்றும் பூஜா ஆகியோருக்கு சிம் கார்டுகளை வழங்கியது தெரியவந்தது.

அதன் மூலம் 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகளின் வாட்ஸ்அப் செயலியை ஹேக் செய்து அவர்களின் அந்தரங்க சாட்டிங் செய்த விஷயங்களை வெளியிடப்போவதாக மிரட்டியுள்ளனர். இதில் பயந்த மாணவிகளிடம் ஏராளமாக பணமும் பறித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஃபரிதாபாத் போலீசார் பூஜா உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here