சிவகங்கை அருகே 2 துப்பாக்கியுடன் சுற்றிய 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் ..

738

சிவகங்கை புறநகர்ப் பகுதியான இந்திரா நகரில் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அந்த வழியே வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஸ்கார்பியோ வானத்தில் வந்த 5 பேர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து போலீசார் ஐந்து பேர்களையும் இறக்கி வானத்தை சோதனை செய்ததில், பைனாகுலர் பொருத்திய இரண்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பிடிபட்டது. இதனையடுத்து 5 பேரையும் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் எந்த நோக்கத்துடன் வந்தார்கள் துப்பாக்கி அவர்களுக்கு எப்படி கிடைத்தது என போலீசார் இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கையில் துப்பாக்கியுடன் இளைஞர்கள் பிடிபட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here