ஜம்மு – காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

687

திங்களன்று அதிகாலை 3.30 மணியளவில் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணாகாட்டி செக்டார் பகுதியில் அமைதி ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்ததாகவும், ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதே போல் காலை 5.30 மணியளவில் ரஜோரி மாவட்டத்திலும் மீண்டும் தாக்குதல் நடத்தியதையடுத்து, இந்திய வீரர்களும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் இந்திய தரப்பில் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல் அனந்தநாக் மாவட்டத்திலும், பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களாக நாளொன்றுக்கு 3 முதல் 4 முறையாவது பாகிஸ்தான் ராணுவம், அமைதி ஒப்பந்தத்தை மீறி வருகிறது. நடப்பாண்டில் இதுவரை 800 முறை பாகிஸ்தான் அமைதி ஒப்பந்தத்தை மீறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here