Home தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பகுதியில் ரூபாய்24000/- மதிப்புள்ள 3HP மின் மோட்டார் மற்றும் ஆயில் என்ஜின் திருடிய 04 பேர் கைது.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பகுதியில் ரூபாய்24000/- மதிப்புள்ள 3HP மின் மோட்டார் மற்றும் ஆயில் என்ஜின் திருடிய 04 பேர் கைது.

0
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பகுதியில் ரூபாய்24000/- மதிப்புள்ள 3HP மின் மோட்டார் மற்றும் ஆயில் என்ஜின் திருடிய 04 பேர் கைது.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பகுதியில் ரூபாய்24000/- மதிப்புள்ள 3HP மின் மோட்டார் மற்றும் ஆயில் என்ஜின் திருடிய 04 பேர் கைது. அவர்களிடமிருந்து மின்மோட்டார் மற்றும் ஆயில் இன்ஜின், திருட்டுக்கு பயன்படுத்திய 02 இரண்டு சக்கர வாகனம் பறிமுதல்.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுக்கா, வாழப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த பிச்சாண்டி மகன் ரகுபதி வயது 36 என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ரூபாய் 16000 மதிப்புள்ள 3HP மின்மோட்டார், ரூபாய் 8000 மதிப்புள்ள ஆயில் என்ஜின் , திருடு போனதாக கிடைத்த புகாரையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.R.சிபிச்சக்கரவர்த்தி IPS., அவர்களின் உத்தரவுப்படி, தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.அசோக் குமார் அவர்களின் மேற்பார்வையில், செய்யாறு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.V.G.சுரேஷ் அவர்களின் தலைமையில், பெரணமல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.N.கோமளவள்ளி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் திருடிய நபர்களான 1)ராவணன், வ/24, த/பெ. யஸ்வந்த், மேல்சீசமங்கலம் கிராமம், செய்யாறு தாலுக்கா 2)சந்துரு, வ/25, த/பெ. ஜோசப், மேல்சீசமங்கலம் கிராமம், செய்யாறு தாலுக்கா 3)முத்துக்குமரன், வ/27, த/பெ. மோகன்தாஸ், மேல்சீசமங்கலம் கிராமம், செய்யாறு தாலுக்கா 4)வினோத், வ/28, த/பெ.சுந்தரேசன், மேல்சீசமங்கலம் கிராமம், செய்யாறு தாலுக்கா என்பவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். மேலும் அவர்களிடமிருந்து 3HP மின் மோட்டார், ஆயில் என்ஜின், மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய 02 இரண்டு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here