Home தமிழ்நாடு போலீஸ் வேலை; ரூ.30 லட்சம்!’ -கதையை நம்பிப் பணத்தை இழந்த திருவண்ணாமலை இளைஞர்கள்

போலீஸ் வேலை; ரூ.30 லட்சம்!’ -கதையை நம்பிப் பணத்தை இழந்த திருவண்ணாமலை இளைஞர்கள்

0
போலீஸ் வேலை; ரூ.30 லட்சம்!’ -கதையை நம்பிப் பணத்தை இழந்த திருவண்ணாமலை இளைஞர்கள்

போலீஸ் வேலை; ரூ.30 லட்சம்!’ -கதையை நம்பிப் பணத்தை இழந்த திருவண்ணாமலை இளைஞர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் என்பவரின் மகன் சிவகுமார் (24). இவர், காவல்துறையில் பணிபுரிய ஆசைப்பட்டுள்ளார். இதற்காக, முயற்சி செய்தபோது, கலசப்பாக்கம் துருகம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (25), எஸ்.எம்.நகரைச் சேர்ந்த சரவண ராஜி (25) ஆகிய இரண்டு பேர் சிவகுமாருக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள். அவர்கள் இருவரும், “எங்களுக்கு அதிகார மட்டத்தில் தொடர்பு இருக்கிறது

உனக்கு கான்ஸ்டபிள் வேலை வாங்கித் தருகிறோம். அதற்கு, கொஞ்சம் செலவாகும்’’ என்று சிவகுமாரிடம் கதை விட்டுள்ளனர். சிவகுமாரும் ரூ.2,25,000 ரொக்கப் பணத்தை பெற்றோர் மூலம் திரட்டிக் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிச் சென்ற இரண்டு பேரிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. சிவகுமார் போனில் தொடர்பு கொண்டாலும் மழுப்பலாக புதுப் புது கதையை அளந்துவிட்டுள்ளனர்.

திடீரென போனையும் சுவிட்ச்-ஆஃப் செய்துவிட்டனர். அதன் பின்னரே, தன்னை அவர்கள் ஏமாற்றியது சிவகுமாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸில் சிவகுமார் புகார் அளித்தார். டி.எஸ்.பி (பொறுப்பு) சரவணகுமார் தலைமையிலான போலீஸார், வழக்குப் பதிவு செய்து மோசடி நபர்களான செல்வம், சரவண ராஜியைத் தேடிப்பிடித்துக் கைதுசெய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பிடிபட்ட 2 பேரும், இதேபோல் ஏற்கெனவே 21 இளைஞர்களிடம் போலீஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் ரூ.30 லட்சம் வரை கைவரிசை காட்டியிருப்பதும் தெரியவந்திருக்கிறது. அவர்களிடமிருந்து 3 கார்கள், 21 பேரின் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டு அசல் மாற்றுச் சான்றிதழ்களையும் போலீஸார் கைப்பற்றினர். இதையடுத்து, இரண்டு பேரையும் தங்கள் பாணியில் சிறப்பாகக் கவனித்த போலீஸார், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here