ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை புகார் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய இளைஞர் கைது.

501

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பொதுமக்களின் புகாரக்காக  தனியாகபிரத்யேகவாட்சப் எண் உள்ளது.  இந்த வாட்சப் எண்ணிற்கு நேற்று முன்தினம் ஒரு வீடியோ வந்துள்ளது. அதனை திறந்து பார்த்தபோது அதில் ஆபாச வீடியோ இருந்துள்ளது.சம்மந்தப்பட்ட எண் குறித்து விசாரித்தபோது கோவையை சேர்ந்த சரவணம்பட்டி சிவானந்தபுரம் மருதிநகரை சேர்ந்த கணேசன் மகன் பிரேம்கிரன்(வயது32) என்பவர் என்பது தெரிந்தது. இதுகுறித்து காவல்கட்டுப்பாட்டு அறை காவலர் கண்ணன் ராமநாதபுரம் நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜீவரெத்தினம் வழக்குபதிவு செய்து பிரேம்கிரனை கைதுசெய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here