அறந்தாங்கி வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது

712

வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது

அறந்தாங்கி: அறந்தாங்கியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் மணி என்ற இடிமணி(வயது 31). இவரை கடந்த 16-ந் தேதி 4 பேர் வெட்டிக்கொலை செய்தனர். இது தொடர்பாக அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அறந்தாங்கியை சேர்ந்த குலாம்மைதீன்(24) திருமயம் கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக சேக் அப்துல்லா உள்பட 3 பேரை அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த குலாம்மைதீனின் அண்ணன் சேக்அப்துல்லா(40), சர்புதீன்(26), விஜய்(22) ஆகிய 3 பேரையும் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் கைது செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here