

கரூரில் போலீஸ் அதிகாரி போல் நடித்த இரண்டு பேர் கைது கார் பறிமுதல்.
கரூர் – 23.06.2020
கரூர் தெற்கு காந்திகிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் தாந்தோணி மலையில் ரமேஷ்( வயது 28) என்பவர் நடத்திவரும் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி எடுத்து வந்தார். 15 நாட்களுக்கான கட்டணத்தை சுரேஷ் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் ரமேஷ், கரூர் எல்ஜிபி நகரில் வசித்து வரும் ரதி( வயது 45), சரவணகுமார் (வயது 31) ஆகிய 3 பேரும் கரூர் தாந்தோணி மலையில் உள்ள அரசு கலைக் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் ஒரு காரில் வந்து தன்னை குச்சியால் அடித்து மிரட்டியதாக தான்தோன்றிமலை போலீசில் புகார் செய்தார். அப்போது ரதி தன்னை திருச்சி கோட்டை காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும் சரவணகுமாரை ஏட்டாகவும் பணிபுரிவதாக கூறி தன்னை மிரட்டியதாக சுரேஷ் போலீசில் தெரிவித்தார்.
இதையடுத்து தாந்தோனிமலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். ரதி ,சரவணகுமார், ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.அவர்கள் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.