கோவில்பட்டியில் வியாபாரிகளை விசாரணைக்கு அழைத்து சென்ற காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்!

820

ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்!


கோவில்பட்டி சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சாத்தான்குளத்தில் 7 மணி நேரத்திற்கும் மேலாக சாலைமறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கோவில்பட்டி சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பேய்க்குளம் பகுதியில் வியாபாரிகள் சங்கம் சார்பாக கடையடைப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. கடையடைப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில், உயிரிழந்தவர்களின், உறவினர்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு திருச்செந்தூர் நாகர்கோவில் சாலையில் காலை 8 மணி அளவில் மறியலில் ஈடுபட்டனர்.

இரண்டு ஏடிஎஸ்பி மற்றும் நான்கு டிஎஸ்பி தலைமையில் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அது குறித்து அதிகாரிகள் உறுதியான பதில் அளிக்காததால், தற்போது வரை அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து வருகின்றனர்.

இதனிடையே தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலன் உத்தரவிட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here