Home தமிழ்நாடு புதுக்கோட்டை அருகே பெட்டி பெட்டியாக காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா மூட்டைகள் பறிமுதல்.. 2 பேர் கைது..

புதுக்கோட்டை அருகே பெட்டி பெட்டியாக காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா மூட்டைகள் பறிமுதல்.. 2 பேர் கைது..

0
புதுக்கோட்டை அருகே பெட்டி பெட்டியாக காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா மூட்டைகள் பறிமுதல்.. 2 பேர் கைது..

பெட்டி பெட்டியாக கடத்தி வரப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகள் புதுக்கோட்டையில் சிக்கியது

போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கொடுத்த தகவலின் பேரில் புதுக்கோட்டை நகர காவல்நிலைய போலீசார் காரை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது

மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்தி குமாரிடம் இன்று மாலை தொடர்பு கொண்டு புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வழியாக சைலோ காரில் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக தகவல் அளித்தனர்

தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் பரவாசுதேவன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தபோது புதுக்கோட்டை லேனா மண்டபம் அருகே சைலோ கார் ஒன்று சென்று கொண்டிருந்தது அதனை மடக்கி பிடித்த போது காரில் இருந்த 3 பேர் தப்பி ஓடினர் இரண்டு பேர் போலீசாரால் கைது செய்யப் பட்டனர்

இதனை தொடர்ந்து காரை சோதனை செய்தபோது அதில் கார் முழுவதும் பண்டல் பண்டலாக 19 அட்டைப்பெட்டியில் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காரை பறிமுதல் செய்ததோடு பிடிபட்ட இரண்டு பேரையும் கைது செய்து புதுக்கோட்டை நகர காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்

ஒருவர் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே நைனார் முகமது என்பதும் மற்றொருவர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் என்பதும் தெரியவந்தது

இதனை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாக உள்ளதால் இதனை தொடர்ந்து புதுக்கோட்டை போலீசார்
மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர் தொடர்ந்து அவர்களிடம் கைப்பற்றப்பட்ட கார் போதைப்பொருள் மற்றும் கைது செய்யப்பட்ட நைனார் முகமது மற்றும் சத்யராஜ் ஆகியோரை ஒப்படைத்தனர்.

ஏற்கனவே கடற்கரை பகுதிகளான மாமல்லபுரம் மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக விலை மதிப்புமிக்க போதைப்பொருள் கடலில் மிதந்து வந்து கைப்பற்றப்பட்டதாக சம்பவம் அரங்கேறி இருந்த நிலையில் கடற்கரை பகுதியான மணமேல்குடியில் இருந்து பண்டல் பண்டலாக அதே போதைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு 1.5. கோடி ரூபாய் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here