வாகன சோதனையின்போது வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்கி பிற்காலங்களில் பிரச்சனைகளை தேடி கொள்ள வேண்டாம். கொரோனா தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பு அதிகாரி ஐஜி வனிதா இளைஞர்களுக்கு அறிவுறுத்தல்.வீடியோ உள்ளே

843

திருவள்ளூர் மாவட்டத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பு அதிகாரியும் ரயில்வே ஐஜியுமான வனிதா சோதனைச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார். செங்குன்றம் அடுத்த நல்லூர், எளாவூர் சோதனைசாவடிகளில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 4நாட்களில் மட்டும் 3000வழக்குகள் பதிவு செய்து 2700 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மாவட்டம் முழுவதும் 1100 போலீசார் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். காவல்துறையினருக்காக இல்லாமல் தங்களுடைய பாதுபாப்பிற்காக பொதுமக்கள் முகக்கவசங்கள் அணியவேண்டும் என கேட்டுக் கொண்டார். தற்போது அமலில் உள்ள இந்த 12நாட்கள் முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை முற்றிலும் குறையும் என நம்பிக்கை தெரிவித்தார்.வரும் 30ஆம் தேதி வரையான முழுஊரடங்கு முழுமையாக செயல்படுத்தப்படும் என குறிப்பிட்டவர் இதில் வரும் நாட்களில் தளர்வு எதுவும் இருக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்க வேண்டாம் உறுதியுடன் தெரிவித்தார்.
போலீசாரின்
வாகன சோதனையின்போது இளைஞர்கள் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்க வேண்டாம் எனவும் பிற்காலங்களில் பிரச்சனைகளை தேடி கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது பொன்னேரி உதவி கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி,
மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி கல்பனா தத் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here