ரூ.15 கோடியை தொட்ட ஊரடங்கு அபராதம்…! 5 லட்சம் வாகனங்கள் பறிமுதல்
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 5,26,426 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25 முதல் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு ஐந்து கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு நீடித்தாலும், கடந்த 1ம் தேதி முதல் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் கொரோனா தொற்று பரவுதல் குறையவில்லை.
எனவே ஊரடங்கை மீறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இதுவரை ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 7,14,850 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
6,57,112 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரூ. 14,95,23,610 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
