
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களிடம் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரவேற்பாளர் அறையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு காணொளி மூலம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம் தொடர்பு கொண்டு அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார், தற்போது தமிழக அரசின் பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்கள் அனைவரும் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு காணொளி இன்று 25.06.2020 முதல் துவக்கப்பட்டுள்ளது, இதன் மூலமாக காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் தொடர்பாக பொதுமக்கள் அனைவரும் கலந்துரையாடவும் மேலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக இத்தகைய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.