ஆம்பூர் அருகே ஊரடங்கு உத்தரவை மீறி கடையைத் திறந்து வைத்து வியாபாரத்தில் ஈடுபட்ட கடையில் இருந்த எலக்ட்ரானிக் எடை இயந்திரத்தை தூக்கி வீசிய தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் புதிய எடை இயந்திரத்தை வாங்கிகொடுத்த காவல்துறையினர்..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியில் ராஜா என்பவர் குளிர்பானம் மற்றும் மளிகை கடை நடத்திவருகிறார் ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று மாலை நேரத்தில் கடைகளை திறந்து வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டதால் உமராபாத் தலைமை காவலர் ரகுராமன் என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த கடையில் இருந்த எலக்ட்ரானிக் எடை இயந்திரத்தை தூக்கிவீசி எரிந்தார் அதில் எலக்ட்ரானிக் எடை இந்திரம் சேதமடைந்ததால் கடையின் உரிமையாளர் ராஜா என்பவருக்கு திருப்பத்தூர் மாவட்டம் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் நேரில் சென்று எலக்ட்ரானிக் எடை இயந்திரத்தை வழங்கினார்..