கரூர் அருகே கிராமச்சாலையில் நடு ரோட்டில் 3 அடி நீள அரிவாளால் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய புள்ளிங்கோ – 5 இளைஞர்களை சின்னதாராபுரம் போலீசார் கைது செய்து விசாரணை

625

கரூர் – 26.06.2020

கரூர் அருகே கிராமச்சாலையில் நடு ரோட்டில் 3 அடி நீள அரிவாளால் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய புள்ளிங்கோ – 5 இளைஞர்களை சின்னதாராபுரம் போலீசார் கைது செய்து விசாரணை.

கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தை அடுத்த ராஜ புரத்தை சேர்ந்த இளைஞர் அபிலேஷ்க்கு பிறந்த நாள் என்று கூறப்படுகிறது. இதனால் அதே பகுதியை சார்ந்த இளைஞர்கள் 10க்கும் மேபட்டோர் ஒன்று சேர்ந்து ராஜபுரம் கிழக்கு பகுதியில் சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது கேக் வைத்து, பெரிய நீளமான அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இவற்றை இளைஞர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலை தளங்களான வாட்ஸ் அப், முகநூல் பதிவிட்டதுடன், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிலும் வைத்துள்ளனர். இதை பார்த்த மற்ற இளைஞர்கள் இவர்களின் செயல்பாடுகள் கண்டிக்க தக்கது எனக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை பகிருங்கள் என்று வாட்ஸ் மூலம் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வீடியோ காவல் துறையினரின் உயர் அதிகாரிகளின் கண்ணில் படவே அவர்களை கொத்தாக தூக்கி வந்த சின்னதாராபுரம் போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here