


வாய்க்காலில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர். மதுரை மாவட்டம் மானகிரி அருகே உள்ள வாய்க்காலில் இன்று மதியம் பசுமாடு ஒன்று வாய்க் காலில் விழுந்ததாக தல்லாகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் வந்தது சம்பவ இடத்திற்கு விரைந்த தல்லாகுளம் தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின் வாய்க் காலில் விழுந்த பசு மாட்டினை உயிருடன் பத்திரமாக மீட்டனர் பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளும் நன்றியும் தெரிவித்தனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்