
முகநூலில் திருமாவளவன் குறித்து அவதூறு: பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் குறித்து முகநூலில் அவதூறாகவும், களங்கம் கற்பிக்கும் வகையில் பதிவிட்ட பாஜக பிரமுகர் மீது சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குறித்து முகநூலில் அவதூறாகவும், அவரது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் சிதம்பரத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி மாநில இளைஞரணி துணைத் தலைவர் கோபிநாத் பதிவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் மாவட்டச் செயலாளர் பால .அறவாழி தலைமையில் செய்தி தொடர்பாளர் திருவரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் திரண்டு சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன், நகர காவல் நிலைய ஆய்வாளர் சி. முருகேசன் ஆகியோரை சந்தித்து புகார் மனு அளித்தனர்
புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.