கொரோனாவில் இருந்து குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பிய தீயணைப்பு வீரர்களை சைலேந்திரபாபு இ.கா.ப., அவர்கள் வரவேற்றார்.
கொரோனோ நோய் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய இடங்களில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் நாள்தோறும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் களப்பணியாற்றி வரும் தீயணைப்பு வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் ஒருபகுதியாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பிய சுமார் 60 தீயணைப்பு வீரர்களுகளை ஊக்குவிக்கும் விதமாக எழும்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தலைமையகத்தில் இயக்குநர் அவர்கள் தலைமையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.