மதுரை ஜூன் 27 :-தமிழகத்தில் களத்தில் உள்ள காவலர்களுக்கு முழு முகக் கவசம் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் முன் களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரி மதுரையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் பிரகாஷ் புகழேந்தி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் தளத்தில் உள்ள காவலர்களுக்கு முகத்தை மறைக்கும் சீல்டு கலங்க உத்தரவிட்டனர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் காவலர்கள் முழு முக கவசம் அணிவதை அந்தந்த மாவட்ட எஸ்பி உறுதிப்படுத்தவேண்டும். தூய்மைப் பணியாளர்கள் முகக்கவசம்,கையுறை அணிந்து பணிபுரிவதை உறுதிப்படுத்தவேண்டும்.பணியில் உள்ள காவலர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.