
பல்லாவரம் அருகே இரண்டு காவலர்களுக்கு கொரோனா
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் சங்கர் நகர் காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் என இருவருக்கு கொரோனா நோய் தொற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் இதே காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்த காவலர்கள் ஐந்து பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதால், தற்போது சங்கர் நகர் காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் காவலர்கள் கலக்கத்தில் உள்ளனர்.