
தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், மருத்துவ கல்லூரி டீன்கள் என கொரோனா சமூக பரவலை தடுக்கும் பொருட்டு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் காணொளி மூலமாக நேரடியாக தொடர்ந்து கண்காணித்தும் அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.. இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமாரிடம் கொரோனா தொற்று தொடர்பாக கலந்து உரையாடி ஆலோசனை வழங்கினார்