Home தமிழ்நாடு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்கள்..சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விஸ்வநாதன் பேட்டி..

பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்கள்..சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விஸ்வநாதன் பேட்டி..

0
பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்கள்..சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விஸ்வநாதன் பேட்டி..
சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தங்க சாலை மணிகூண்டு அருகே வாகன தனிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு சென்னையில் இன்று செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்கள். இன்று அதிகாலையில் இருந்தே காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
52, 234 வாகனங்கள் பறிமுதல், 60,131 வழக்குகள் பதிவு, 24,704 முக கவசங்கள், தனி மனித இடைவெளி பின்பற்றாதவர்கள், போலி இ-பாஸ் மூலம் சென்றதற்காக 58 வாகனங்கள் பறிமுதல், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் என கூறி போலி இபாஸ் மூலம் பயணித்த வாகனங்கள்.
பொதுமக்கள் எப்போதும் இதே போல முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இ-பாஸை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம். அது குற்றம். போலியாக தயாரித்து இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்படுபவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது தொடர்பான வழிமுறைகளை நீதிமன்ற உத்தரவுகள் இருக்கிறது. குறிப்பாக அடிப்பதோ, துன்புறுத்துவதோ கூடாது, யார் மனதையும் புன்படும் வகையில் பேசக்கூட கூடாது என அடிப்பது சட்டப்படி தவறு. அது தொடர்பாக அனைத்து காவல்துறையினருக்கும் வலியுறுத்தி உள்ளோம்.
சென்னை காவல்துறையில் இதுவரை 1065 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 410 பேர் பூரணகுணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினருக்கு நிவாரண நிதி கிடைப்பது தொடர்பான நடவடிக்கை பரிசீலனையில் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here