மணப்பாறை அருகே
திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை.
போலீசார் விசாரணை.

706

மணப்பாறை அருகே
திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை.
போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கல்லாமேடு அருகே உள் கவுண்டம்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் உமா மகேஷ்வரி வயது 25 என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நாகராஜ் அவரது மனைவியை மணப்பாறை அருகே உள்ள மஞ்சம்பட்டியில் உமா மகேஷ்வரியின் வீட்டில் விட்டு விட்டு கோவைக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை உமா மகேஷ்வரி திடீரென மயங்கி விழுந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை கவுண்டம்பட்டிக்கு எடுத்துச் சென்றனர்.
திருமணம் ஆகி 6 மாதங்கள் மட்டுமே ஆகிய நிலையில் இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் இறந்த இளம்பெண்ணின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உமா மகேஷ்வரி எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் அந்த பாதிப்பில் தான் இறந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உமா மகேஷ்வரி ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் சூழலில் திருமணம் நடைபெற்று 6 மாதங்கள் மட்டுமே ஆவதால் ஶ்ரீரங்கம் கோட்டாட்சியரின் விசாரணையும் நடைபெறுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here