மதுரை அருகே ஊரடங்கு நேரத்தில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிய 5 பேரை நாகமலைபுதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர் பணம் 15 ஆயிரத்து 680 பறிமுதல் .

603

மதுரை :

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

மதுரை:

ஊரடங்கு நேரத்தில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிய 5 பேரை நாகமலைபுதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர் பணம் 15 ஆயிரத்து 680 பறிமுதல் .

கொரானா வைரஸ்காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் ஆடி வருவதாக நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது சம்பக்குளம் பகுதியில் ஐந்து நபர்கள் பணம் வைத்து சூதாட்டம் ஆடி வந்தனர்.

அவர்களைச் சுற்றி வளைத்த போலீசார் ஐந்து நபர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் அவர்களிடமிருந்து பணம் 15 ஆயிரத்து 680 ௹பாய் பறிமுதல் செய்தனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here