கைது செய்யும் போது இவற்றை கடைபிடிக்கனும்! உச்ச நீதிமன்றத்தின் 11 வழிகாட்டல்கள்!

678

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, கைது செய்யும் முறைகுறித்து உச்ச நீதிமன்றம் 11வழிகாட்டுதல்களை ஏற்கனவேகூறியுள்ளது. 

கீழ்கண்ட வழிகாட்டுதல்களைவாசித்தால் போதும்ம் தற்போது பலகாவல் நிலையங்களில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எவ்வாறுகாற்றில் பறக்கவிடுகிறார்கள் என்பதுதெரியவரும்.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள்.

1. கைது செய்கின்ற அதிகாரிஅடையாள அட்டைபொருத்தியிருக்கவேண்டும்.

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேகைது குறிப்பு தயாரிக்க வேண்டும்.

3. கைது செய்யப்படும் தகவலைஉறவினர், நண்பர், தெரிந்தவருக்குத்தெரிவிக்க வேண்டும்.

4. கைது செய்யப்பட்ட விபரம் 8 மணிமுதல் 12 மணி நேரத்திற்குள்உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல்தெரிவிப்பதற்கான உரிமை உண்டுஎன்பதை கைது செய்யப்பட்டவருக்குத்தெரிவிக்க வேண்டும்

6. காவலில் உள்ள இடத்தில் கைதுவிபரம், கைது குறித்தத் தகவல்தெரிவிக்கப்பட்டவிபரம் மற்றும் எந்தஅதிகாரியின் பொறுப்பில் இருக்கிறார்என்ற விபரங்களை பதிவேட்டில்குறிக்க வேண்டும்ஞ்

7. கைது செய்யப்பட்டவர் உடல்நிலையைப் பரிசோதித்துச் சோதனைக்குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

8. கைது செய்யப்பட்டவரை 48 மணிநேரத்திற்கு ஒருமுறை மருத்துவப்பரிசோதனை செய்ய வேண்டும்.

9. கைது செய்யப்பட்ட ஆவணங்களைக்குற்றவியல் நடுவருக்கு அனுப்பவேண்டும்.

10. கைது செய்யப்பட்டவரைவிசாரிக்கும்போது வழக்கறிஞர்உடனிருக்க வேண்டும்.

11. கைது பற்றிய தகவல் மக்கள்பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்

இப்படி தெளிவாக உச்சநீதிமன்றம்குறிப்பிட்டிருந்தும் நமக்கு தெரிந்துஎந்த ஒரு காவல் நிலையத்திலும் இந்தவிதிகளை பின் பற்றினார்களா என்றுதெரிவில்லை. இதெல்லாம்கடைபிடிக்கப்படுகிறதா என்பதைமாஜிஸ்திரேட்டுகள் அவ்வப்பொழுதுகாவல் நிலையங்களுக்கு சென்றுஆய்வு நடத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here