ஜம்மு காஷ்மீரில் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை

678

தெற்கு  காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள குல்சோகர் என்ற இடத்தில் செவா உல்லர் கிராமத்தில்  சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக  பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. 

இதையடுத்து இன்று அதிகாலை அந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனரா என பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

மோதலில் சுட்டு கொல்ல்பட்ட பயங்கவாதி ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி  என அழைக்கப்படும் மசூத் என தெரியவந்து உள்ளது. தோடா மாவட்டத்தில் இருந்து வந்த கடைசியாக எஞ்சியிருக்கும் பயங்கரவாதி மசூத் என்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறைத் தலைவர் தில்பாக் சிங் தெரிவித்தார்.

தோடாவில் நடந்த ஒரு கற்பழிப்பு வழக்கில் மசூத் குற்றஞ்சாட்டப்பட்டார், அவர் ஓடிவந்து ஹிஸ்புல் முஜாஹிதீன் இஅயக்கத்தில் சேர்ந்தார் என்று காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் தனது செயல்பாட்டு பகுதியை காஷ்மீருக்கு மாற்றினார்.

ஜம்மு காஷ்மீர் காவல்துறைத் தலைவர் தில்பாக் சிங் மசூத்தை கொன்றது  பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here