தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற இருவர் கைது – நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் நடவடிக்கை

499

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற இருவர் கைது – நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் நடவடிக்கை

தமிழகத்தில் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் மறைமுகமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள கடையில் புகையிலை பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது தொடர்ந்து அதே பகுதியில் மணல்பட்டி என்ற இடத்தில் புகையிலை பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனடிப்படையில் புகையிலைப் பொருட்களை விற்று வந்த சரஸ்வதி மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது

இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here