தாராபுரத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயராமன் தலைமையில் நல்லுறவு கூட்டம்

761

தாராபுரத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயராமன் தலைமையில் நல்லுறவு கூட்டம்

தாராபுரம் ஜூன் 29
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல்துறை மற்றும் தாராபுரம் அனைத்து வணிகர்கள் சங்கம். நகைக்கடை உரிமையாளர்கள்.ஆட்டோ.டாக்ஸி.வேன் ஓட்டுனர் உரிமையாளர் சங்கம் ஆகியோர் கலந்துகொண்ட நல்லுறவு கூட்டம். தாராபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயராமன் தலைமை தாங்கி பேசுகையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் வணிகர்கள் மிகவும் பாதுகாப்பாக தொழிலில் ஈடுபட வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களை முகக்கவசம் சமூக இடைவெளியுடன் வழி நடத்த வேண்டுமென்றும் மற்றும் தாராபுரத்தில் காவல்துறை சேர்ந்தவர்கள் ஏதாவது தவறான முறையில் பேசினாலும் நடந்தாலும் நேரடியாக எனக்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். காவல்துறையினர் பொதுமக்கள் வியாபாரிகள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் குண்டடம் காவல் ஆய்வாளர் சுரேஷ். தாராபுரம் மகளிர் காவல் ஆய்வாளர் வனிதாமணி.மற்றும் தாராபுரம் வணிகர் சங்கத் தலைவர் ஞானசேகரன். நகைக்கடை உரிமையாளர் சங்கத் தலைவர் தியாகராஜன்.சாரதாஸ் சண்முகவேல். மற்றும் வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here