புதுக்கோட்டை அருகே தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடிய வந்த சிறுவன் கைது.. இவனிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்..

1476

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உட்பட பல்வேறு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்களை ஆடம்பர செலவு செய்வதற்காக திருடி அடகு வைத்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்து நீதிபதியின் உத்தரவின் பெயரில் அறிவுரை கூறி ஜாமீனில் விடுவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து திருடு போவதாக கணேஷ் நகர் போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து இரு சக்கர வாகன திருடர்களை பிடிக்க திட்டமிட்ட போலீசார் அதற்காக புதுக்கோட்டை தஞ்சை சாலை மற்றும் அண்டக்குளம் சாலைகளில் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர்.அப்போது அண்டக்குளம் பிரிவு விளக்கு அருகே திருடு போனதாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்ட ஒரு இருசக்கர வாகனத்தில் கிள்ளனூரை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் வந்தது தெரியவந்தது.இதனையடுத்து அந்த சிறுவனை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே திருடுபோன 8 வண்டிகளை தான்தான் திருடினேன் என அந்த சிறுவன் போலீசாரிடம் ஒப்புக்கொண்டது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனையடுத்து அந்த சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணையில் தாள் பத்தாம் வகுப்பு படித்து முடித்து உள்ளதாகவும் தன்னுடன் படித்த மாணவர்கள் ஆடம்பரமாக செலவு செய்வதை பார்த்து தானும் அதுபோல் வாழ வேண்டும் என ஆசைப்பட்டு இரு சக்கர வாகனங்களை திருடி அதனை தனது கிராமங்களை சுற்றிய பகுதிகளில் தெரிந்த நபர்களிடம் அடகு வைத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஆடம்பரமாக செலவு செய்து வந்ததாகவும் கூறினார்.இதனையடுத்து அந்த சிறுவன் அடகு வைத்திருந்த 8 இருசக்கர வாகனங்களை சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பின் அந்த சிறுவனை கைது செய்த கணேஷ் நகர் போலீசார் புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிபதி அறிவு சம்பந்தப்பட்ட சிறுவனை சொந்த ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.மேலும் தற்போது ஏழு ஆண்டுகள் தண்டனை பெறும் வழக்குகளுக்கு மட்டுமே குற்றவாளிகளை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் மற்ற சாதாரண கைதிகளை சொந்த ஜாமீனில் போலீசார் ஏற்பட்டிருக்கலாம் எனவும் நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.

இதன்பேரில் சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு அறிவுரைகள் வழங்கிய போலீசார் அவனது பெற்றோர்களிடம் அனுப்பி வைத்தனர்.புதுக்கோட்டை அருகே 16 வயது சிறுவன் ஒருவன் ஆடம்பர செலவு செய்ய ஆசைப்பட்டு 8 இரு சக்கர வாகனங்களை திருடி அடகு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

File name:29.6.20 PDK 16 YEARS BOY BIKES THEFT NEWS

இன்று புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல்துறையினர் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் தலைமையில் 29.06.2020ம் தேதி கணேஷ் நகர் காவல் நிலைய குற்ற எண் 620/ 2020 U/S 379 IPC வழக்கின் இளவர் மணிகண்டன் என்ற போண்டாமணி வயது 16 த/பெ நாராயணன், வடக்கிப் பட்டி கிள்ளனூர் & Post குளத்தூர் தாலுகா புதுக்கோட்டை என்பவரை கைது செய்து கணேஷ் நகர் காவல் நிலைய பகுதிகளில் திருடப்பட்ட 2 TVS Xட SUPER மற்றும் 6 Splender Plus ஆக மொத்தம் 8 இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here