
கடந்த 21.06.2020-ம் தேதி அன்று புளியந்தோப்பு பாடிசன்புரம் லைன் தெருவில் உள்ள இறைச்சி வியாபாரிகளின் சங்கத்தின் அலுவலகத்தின் பீரோவில் பூட்டி வைக்கப்பட்டிருந்த பணம் ரூ.61.50 லட்சத்தை மேற்படி எதிரிகள் பூட்டை உடைத்து திருடி உள்ளனர்.
இவ்வழக்கில் சென்னை மாநகர காவல் ஆணையாளர், கூடுதல் இணை ஆணையர் வடக்கு, இணை ஆணையாளர் மேற்கு மண்டலம், காவல் துணை ஆணையாளர் புளியந்தோப்பு மாவட்டம் மற்றும் புளியந்தோப்பு சரக உதவி ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரில், இவ்வழக்கில் எவ்வித தடையமும் இல்லாமல், P1 புளியந்தோப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட பல குற்றவாளிகளை பிடித்து விசாரணை செய்தனர். அதன் பலனாக இன்று 29.06.2020 ஆம் தேதி அதிகாலை மேற்படி எதிரிகளை பிடித்து விசாரித்தபோது எதிரிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் எதிரிகளிடமிருந்து சுமார் 39 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் சம்பவத்தின்போது பயன்படுத்திய இரும்பு கம்பி மற்றும் கத்தி ஆகியவற்றை கைப்பற்றப்பட்டது. எதிரிகள் மேற்படி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவார்கள்
இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைவில் கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்த தனிப்படை காவல் ஆய்வாளர் திரு.கு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் தனிப் படை காவலர்கள் குமரேசன் குமார், பூமிநாதன் நித்தியானந்தம், ஊர்க்காவல் படை வீரர்கள் திரு. செல்வமணி பார்த்திபன் ஆகியோர்களை காவல் உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டி உள்ளார்கள்.
கொரணா நோய் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் எதையும் பொருட்படுத்தாமல் திறமையாக செயல்பட்டடு எதிரிகளை கைது செய்து பணத்தை மீட்ட தனிப்படையினருக்கு பாதிக்கப்பட்ட இறைச்சி சங்கத்தினர் நன்றியை தெரிவித்தார்கள்.
P1 புளியந்தோப்பு கா நி
கு.எண்.785/2020,
ச/பி, 457, 380 இதச..
எதிரிகள்:
1) சாலமன் ஆ/வ.20,
த/பெ, வெங்கடேசன்,
எண்.76, JJ நகர்,
6 வது தெரு, புளியந்தோப்பு, சென்னை-12.
2) சபி @ முகமது சபி
ஆ/வ.19,
த/பெ. முகமது சலீம்,
எண்: 7/21, தில்லை நாயகம் தெரு,
ஹாண் சிக்கன் தெரு, வீனஸ், பெரம்பூர், சென்னை-11.

