
திருச்சியில் கொடூரம் ! கணவரை மதம் மாற்ற சென்ற பெண்ணுக்கு மயக்க மருந்தை கொடுத்து பலமுறை உல்லாசம் !
மதபோதகர் மீது திருச்சி பெண் புகார்.
திருச்சி நத்தர்வலி தர்கா பகுதியை சேர்ந்தவர் முகமது பாரூக். இவர் மதபோதகராக இருந்து வருகிறார். இந்நிலையில் கே.கே. நகரை சேர்ந்த பர்வீன் என்பவர் இந்து வாலிபரை காதலித்து திருமணம் செய்துள்ளார். தனது கணவரை மதம் மாற்றுவதற்காக முகமது பாரூக்கிடம் அழைத்து சென்றுள்ளார். பின்னர் தனது கணவருக்கு முகமது அஸ்லாம் என்றும் பெயர் வைத்தார். சமீபகாலமாக முகமது பாரூக்கின் அறிவுரைககளில் ஒன்றிப்போன பர்வீனின் கணவர் முகமது அஸ்லாம் அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்தவகையில் முகமது பாரூக் என்ன சொன்னாலும் கேட்க வேண்டும் என தனது மனைவி பர்வீனிடம் கூறியுள்ளார். இந்த நட்பைப் பயன்படுத்திக்கொண்டு முகமது பாரூக், பர்வீனுக்கு புனித நீர் கொடுக்கிறேன் என்ற பெயரில் மயக்க மருந்து கொடுத்து பலமுறை கற்பழித்துள்ளார். மேலும் அவரிடம் இருந்த 25 பவுன் நகையும் பறித்துள்ளார். இதற்கு முகமது பாருக் மனைவி பாத்திமாவும் உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து பர்வீன் திருச்சி கண்டோன்மெண்ட் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் முகமது பரூக் மற்றும் முகமது அஸ்லாம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.