திருப்பூர் மாவட்டம் காங்கயம் திட்டுப்பாறை கொரானா தடுப்பு சோதனைச்சாவடியில் பணியில் இருந்த காவலர் பிரபு PC 218 அவர்கள் நேற்றிரவு குடிபோதையில் சோதனை சாவடியில் நிற்காமல் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது போல் கட்டுப்பாடின்றி சென்ற கண்டெய்னர் லாரி யினை நிறுத்த முயற்சித்த போது அதே லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.