Home தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் பணிகளில் மாற்றமா?.. இன்றோ நாளையோ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..

காவல்துறை உயர் அதிகாரிகள் பணிகளில் மாற்றமா?.. இன்றோ நாளையோ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..

0
காவல்துறை உயர் அதிகாரிகள் பணிகளில் மாற்றமா?.. இன்றோ நாளையோ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..

காவல்துறை உயர் அதிகாரிகள் பணிகளில் மாற்றமா?.. இன்றோ நாளையோ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..

இதனையடுத்து காவல்துறையின் உயர் அதிகாரிகள் பலவரையும் மாற்றுவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பட்டியலை இன்றோ அல்லது நாளையோ உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிடுவார் எனக் கோட்டை வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.

இது குறித்து விசாரித்த போது, “சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன், காவல் துறையில் டெக்னிக்கல் ஏ.டி.ஜி.பி.யாகவும், சென்னை கமிஷ்னராக ஜெயந்த் முரளி அல்லது மன்ஜுநாதா நியமிக்க வாய்ப்பு உண்டு. ஏ.டி.ஜி.பி. கந்தசாமி, சாரங்கன், ஐ.ஜி.க்கள் அன்பு, லோகநாதன், அமல்ராஜ் ஆகியோர் மாற்றப்படவிருக்கிறார்கள்.

மேலும், திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை எஸ்.பி.க்களின் பெயர்களும் இருக்கின்றன. அதேபோல, சட்ட ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக அபய்குமார் சிங், மதுரை டி.ஐ.ஜி.யாக லஷ்மி, மதுரை போலீஸ் கமிஷ்னராக சந்தோஷ்குமார் ஆகியோரை நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது ” என்கிறது ஐ.பி.எஸ். வட்டாரங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here