


30/06/2020
குழந்தைகள் பாதுகாப்பிற்காக தேசிய குழந்தைகள் ஆணையம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக காவல்துறை உறுதுணையாக இருக்கும் – தமிழக கூடுதல் டிஜிபி Dr.M.ரவி
(NCPCR) தேசிய குழந்தைகள் ஆணையத்தின் மாண்புமிகு உறுப்பினர் Dr.R.G. ஆனந்த் அவர்கள் இன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு (WCD)எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி Dr.M.ரவி அவர்களை சந்தித்தார்.
சென்னை டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த “அவசர சந்திப்பில்” ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை பெறப்பட்ட புகார்கள், தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நடந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் அதன் மீது ஆணையம் மேற்கொண்டு வரும் விசாரணைகள் குறித்தும் விரிவான அறிக்கையை கூடுதல் டிஜிபி யிடம் Dr.R.G. ஆனந்த் வழங்கினார்.
மேலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு ஆய்வுகள், உதவிகள், நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வரும் Dr.R.G. ஆனந்த் அவர்களின் சிறப்பான பணிக்கு கூடுதல் டிஜிபி Dr.M.ரவி வாழ்த்து தெரிவித்தார்.