

கன்டெய்னர் மோதி உயிரிழந்த ஆயுதப்படை காவலர் பிரபு அவர்களின் பெற்றோருக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்
குடிமங்கலம்_ஜூலை:-01
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே வாகன சோதனையின் போது லாரி மோதி உயிரிழந்த ஆயுதப்படைக் காவலர் திரு.பிரபு அவர்களின் மறைவிற்கு குடிமங்கலம் – கள்ளப்பாளையத்தில் அமைந்துள்ள காவலர் பிரபுவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி, ரூ.50 ஆயிரம் நிதியுதவி அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் வழங்கினார். அங்கிருந்த பிரபுவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலியும் செலுத்தினார். உடன் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல். மற்றும் பலர் உடனிருந்தனர்..
தாராபுரம் செய்தியாளர் ஜாபர்