


தர்மபுரி மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரானா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.தற்போதையநிலவரப்படி தர்மபுரிமாவட்டத்தில் 81-நபர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தர்மபுரி நகர காவல்நிலையத்தில் இன்று முதல் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் விசாரணை நபர்கள் மற்றும் காவல்நிலையத்தில் பணிபுரியும் 45 காவலர்களுக்கு தெர்மல் ஸ்கேனர்மூலமாக பரிசோதனை செய்த பிறகே கவல்நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தர்மபுரி மாவட்டத்தில் மற்ற 27 காவல்நிலையங்களிலும் இந்த கொரானா பரிசோதனை உபகரணங்கள் பயன்படுத்த உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.