தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் : தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பி ஜெயக்குமார் உறுதி

556

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் : தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பி ஜெயக்குமார் உறுதி

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய எஸ்பியாக பொறுப்பேற்றுள்ள ஜெயக்குமார் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பி ஜெயக்குமார் இன்று (1.7.2020) காலை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து பிரச்சனைனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பொதுமக்களுடன் காவல்துறை நல்லுறவுடன் செயல்படும்” என்று தெரிவித்தார். 

தூத்துக்குடி புதிய எஸ்பி ஜெயகுமார், விழுப்புரம் மாவட்ட மக்களிடம் நல்ல மதிப்பைப் பெற்றவர். ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கையில் திறம்பட செயல்பட்டவர் என்று கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையின் மீது அடுத்தடுத்து கிளம்பும் புகார்களுக்கு இடையே எஸ்பியாக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளதால் மக்களிடம் காவல்துறைக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தரும் வகையிலும், பொதுமக்களுக்கு காவல்துறை நண்பன் என்ற அளவிலும் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை ஜெயக்குமார் எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here