
மதுரையில் சோப்பு விற்பனை குடோனில் பதுக்கி வைத்திருந்த 135 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது..!!! மேலும் ஒருவர் தலைமறைவு..!!!
மதுரை திருமங்கலம் டவுன் பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சோப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் பொருட்களின் ஏஜென்சி நடத்தி வருகிறார்,இந்த நிலையில் இவர் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து மொத்தமாக விற்பனை செய்வதாக மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலரின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அதனை தொடர்ந்து அதிரடியாக அந்த ஏஜென்சிக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்தபோது குடோனில் சுமார் 135 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது, அதனைத் தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் ஏஜென்சியின் உரிமையாளர் மேலாளர் விஜய் கைது செய்தனர்,தலைமறைவாக உள்ள ஏஜென்சியின் உரிமையாளர் கிருஷ்ணனைகாவல்துறையினர் தேடி வருகிறார்கள், குடோனில் இருந்து கஞ்சாவை பறிமுதல் நிலையில் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது,இந்த சம்பவம் தொர்பாக திருமங்கலம் டவுன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்,வீட்டு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்வது போல கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்