ஆண்டிமடம் அருகே விழுது டையான் ஊராட்சியில் கிராம பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை ஜெயகொண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் மோகன்தாஸ் திறந்து வைத்தார்

755

ஆண்டிமடம் அருகே விழுது டையான் ஊராட்சியில் கிராம பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை ஜெயகொண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் மோகன்தாஸ் திறந்து வைத்தார்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விழுதுடையான் கிராம ஊராட்சி மன்ற தலைவர் கொளஞ்சி மற்றும் பொதுமக்கள் இணைந்து கிராமத்தின் பாதுகாப்பிற்காக ரூ 1,00,000/- (ஒரு லட்சம்)மதிப்பீட்டில் CCTV CAMERA -களை வாங்கி ஊரின் முக்கிய ஐந்து இடங்களில் 12 சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனர். இதனை ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மோகன்தாஸ் மற்றும் ஒன்றிய குழுத்தலைவர் சிலம்பூர். மருதமுத்து, ஆண்டிமடம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முஹம்மது இத்ரீஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஊராட்சி மன்ற தலைவர் கொளஞ்சி முன்னிலையில் திறந்து வைத்தனர். அப்போது துணை காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது சிசிடிவி கேமராக்கள் பொருத்தியதன் மூலம் கிராமங்களில் ஏற்படும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் மேலும் அவ்வாறு நடைபெற்றாலும் உடனுக்குடன் கண்டறியும் வகையிலும் சிசிடிவி கேமராக்கள் பயனுள்ளதாக அமையும் .மேலும் இதுபோன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள மற்ற கிராமங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த அனைத்து பொதுமக்களும், ஊர் முக்கியஸ்தர்களும் முன்வர வேண்டும் என கூறினார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here