
திருச்சி ஜீலை 02
காவல் நிலையத்திற்கு வரும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடவடிக்கை எடுக்க
அறிவுறுத்தபட்டுள்ளது – புதிதாக பொறுப்பேற்ற ஐ.ஜி.
ஜெயராம் பேட்டி.
இன்று மத்திய மண்டல
காவல்துறை
தலைவராக
ஜெயராம்
பொறுப்பேற்றுக்கொண்டார்
மத்திய
மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் அரியலூர்
தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் மாவட்டங்களில் சட்டம் & ஒழுங்கை
மற்றும் குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்கும், கொரோனா வைரஸ் நோய்
தொற்றை தடுப்பதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை சிறந்த முறையில்
அமல்படுத்தி சீரிய முறையில் பணியாற்ற அனைத்து காவல் ஆளினர்களும்
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
விபத்துகளை தடுப்பதற்கு முன்னுரிமை
சாலை
கொடுக்கப்படும் என்றும் காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க பொதுமக்கள் மிகவும்
கண்ணியமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது
குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளை நீதிமன்ற வழிகாட்டுதல்
படி சிறையில் அடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று
உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் சமுதாயத்தின்
அனைத்து தரப்பினருடனும் நல்லுறவை பேணி பாதுகாத்து மத்திய மண்டல
காவல்துறையினர் பணியற்றுவதற்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது
மத்திய மண்டலத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் போக்கிரிகள் மீது உடனடியாக
கைது நடவடிக்கை மேற்கொண்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள்
காவல் நிலையத்திற்கு வரும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடவடிக்கை எடுக்க
அறிவுறுத்தபட்டுள்ளது.
Trichy JK
9894920886