
ஆயத படை காவலர்களுக்கான புதிய உடற்பயிற்சி கூடத்தை அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் திறந்து வைத்தார்
அரியலூரில் ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் ஆயத படை காவலர்களுக்கான பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் மகேஷ், ராஜா மற்றும் அகமது உசேன் மற்றும் ஆயத படை காவலர்கள் பலரும் பங்கேற்றனர். இந்நிகழ்வின்போது மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அப்போது பேசியதாவது: அனைத்து காவலர்களும் பணி ஓய்வு நேரங்களில் உடற்பயிற்சி செய்து தங்களை சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதன் மூலம் மன அழுத்தத்தை முற்றிலும் குறைக்க இயலும் . மேலும் காவல் துறையில் உள்ள அனைவரும் மக்களிடம் அன்பாகவும், கனிவாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி பேசினர்.