
உலக நெகிழி இல்லா தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் காவலர்களுடன் விழிப்புணர்வு கலந்துரையாடல்
அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் தலைமையில் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தின் முன்பு நெகிழி இல்லா தினம் குறித்து காலவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது, நெகிழிக்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்துவது, மற்றும் பணி செய்யும் இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது, மேலும் தற்போது நிலவி வரும் தொற்று ஆபாயத்தில் இருந்து அனைவரும் மீள பொதுவாக பயன்படுத்தும் உணவகங்கள், கழிப்பறைகள் போன்ற இடங்களை கட்டாயம் எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் . மாவட்ட காவல் துறை அலுவலகம் பிளாஸ்டிக் இல்லா அலுவலகமாக மாற்ற காலவர்கள் அனைவரும் உறுதி எடுத்து கொள்ளவேண்டும் எனகேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் தனிப் பிரிவு அலுவலர்கள், காவல்அமைச்சு பணியாளர்கள், மற்றும் அதிவிரைவு படையினர் உள்ளிட்டோர் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் பாலா