
கரூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது கரூர் நகர காவல் நிலையம். இந்த காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவருக்கு கொரோனா தொற்று கடந்த 1ம் தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் உதவி ஆய்வாளர் பயன்படுத்திய அறை பூட்டப்பட்டது. இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் 2 கட்டங்களாக பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சேதுராமன் என்ற தலைமை காவலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்பு காவல் நிலைய வளாகத்தில் ஜாமியான பந்தல் போடப்பட்டு மேஜை, நாற்காலிகள் போடப்பட்டு காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் காவல் நிலையம் இயங்கும் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து தடுப்புகள் ஏற்படுத்தியுள்ளனர். இதனால் கரூர் நகர காவல் நிலைய போலீசாரிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.