கும்பகோணத்தில் புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளராக பாலகிருஷ்ணன் பொறுப்பு ஏற்பு.
தமிழகம் முழுவதும் 34 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி கடந்த 18ந் தேதி உத்தரவிட்டார்
இதனை தொடர்ந்து கும்பகோணம்
டிஎஸ்பியாக இருந்த ஜெயச்சந்திரன் பதவி உயர்வு பெற்று
சென்றதால்
கும்பகோணத்தில் புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்று கொண்டார்.
காவல்துறை ஆய்வாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்று கும்பகோணம் புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளராக பாலகிருஷ்ணன் இன்று பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-
கும்பகோணம் சரகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணி பாதுகாக்கவும், சாலை விபத்துக்களை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலை சீர் செய்யவும், குற்றங்களை தடுக்கவும், நடந்த குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்றார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்..