
பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் மதுபான கடையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குடிமகன். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள வடுகப்பட்டி என்னும் கிராமத்தில் அரசு மதுபானக்கடை யானது செயல்பட்டு வருகிறது.அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருடன் குடிமகன்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர் மற்றும் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி வருகின்றனர். இதனால் போலீசாருக்கு பணி செய்வதற்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது என கூறப்படுகிறது.